நாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருஇந்தளுர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிலோமினாமேரி - அலெக்ஸாண்டர் தம்பதியினர். ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த இந்தத் தம்பதியினரின் குடும்பத்தில், தனது தாயைப் பிரிந்த நாய்க்குட்டி ஒன்று வந்து இணைந்துள்ளது.
கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிவரும் நாய் அப்புக்குட்டி எனப் பெயரிட்டு அன்று முதல் குழந்தையைப்போல் அவர்கள் பேணி வளர்த்து வரும் இந்த நாய், அதன் தனித்துவ குணாதிசயங்களால் தற்போது அப்பகுதியின் பேசுபொருள் ஆகியுள்ளது. ஒரு கூடையைக் கொடுத்து கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிவரச் சொல்லி அதில் சீட்டு எழுதி போட்டால், கூடையை வாயில் கவ்விக் கொண்டு, கடைக்குச் சென்று தேவையான பொருள்களை வாங்கி வருகிறது அப்புக்குட்டி.
கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிவரும் நாய் மேலும், பிலோமினாமேரியிடம் அடம்பிடித்து, அவரை ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிச்சென்று, வெண்ணிலா ஐஸ்கிரிம் வாங்கி சாப்பிடும் இந்த அப்புக்குட்டி, மதிய வேளையில் பிரியாணி மட்டுமே உண்கின்றது. மாலை நேரத்தில் ஸ்கூட்டியின் முன்னே உட்கார்ந்து ஒய்யாரமாக ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பது இதனுடைய அன்புக் கட்டளையாம்.
தன்னை வளர்ப்பவர்கள் அளிக்கும் உணவை மட்டுமே உண்ணும் அப்புக்குட்டி, வெளியாட்கள் கொடுக்கும் உணவு எதையும் உண்பதில்லை. வீட்டிற்குள்ளும் வெளியாட்களை அனுமதிக்காமல், ஒரு வளர்ப்பு மகனைப்போல் உலா வந்து பிலோமினாமேரி - அலெக்ஸாண்டர் தம்பதியினரின்குடும்பத்தில் ஒன்றிவிட்ட அப்புக்குட்டியை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க... அணில் குஞ்சுகளை கைவிட்ட தாய்: பாலூட்டி வளர்க்கும் மருத்துவர்