மயிலாடுதுறை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று (நவ.19) மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அவரிடம் விவசாயிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அழுகிய பயிர்களை காண்பித்து வேதனையை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன், “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாதிக்கப்பட்ட பயிர்கள் ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க தேமுதிக வலியுறுத்துகிறது. அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காக்களுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகாக்களுக்கும் நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும். சென்னை மயிலாடுதுறை உள்ளிட்ட மழை பாதித்த மாவட்டங்களில் தமிழ்நாடு அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேமுதிக வரவேற்பு தெரிவிக்கிறது. உடனடியாக அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
மழை காலத்தில் திமுகவின் செயல்பாடுகள் வரவேற்கும் வகையில் உள்ளது தெலுங்கு சினிமாவில் விஜய் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் அனைத்து மொழி படங்களும் வரவேற்கப்பட்டு வெற்றியடைந்துள்ளன. அனைத்து மாநிலங்களிலும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையதல்ல. இதனால் சினிமாத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்” என்றார்.
இதையும் படிங்க: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஈபிஎஸ் திடீர் ஆய்வு..! நடந்தது என்ன..?