திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, 'விடியலைநோக்கி ஸ்டாலின் குரல்' என்ற 100 நாள் தேர்தல் பரப்புரை பயணத்தை கடந்த 20ஆம் தேதி திருக்குவளையில் தொடங்கினார்.
மூன்றாவது நாளாக இன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலுள்ள கடைவீதியில் இன்று உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எஸ்.பி.ஸ்ரீநாதா தலைமையிலான காவல் துறையினர், உதயநிதி முறையான அனுமதியின்றி பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்ய முயன்றனர்.
அப்போது காவல் துறையினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் உட்பட நூற்றுக்கும் அதிகமாக திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பரப்புரையில் ஈடுபட்டிருந்த உதயநிதி கைது உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நரசிங்கம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நேற்று நாகையிலும், அதற்கு முந்தைய நாள் திருக்குவளையிலும் காவல் துறையினர் உதயநிதியை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்’: உதயநிதி ஸ்டாலின்