உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணியில் பிரதான சாலைகள் பழுதடைந்து படு மோசமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்துவருகின்றனர்.
குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவரும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.
அவ்வறிவிப்பின் அடிப்படையில், இன்று (ஜன.12) வேளாங்கண்ணியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.