தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவில் திறமையானவர்கள் யாருமில்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகையில் பேச்சு. - Anna birthday meet in Nagapatinam

நாகப்பட்டினம்: திமுகவில் திறமையானவர்கள் யாருமில்லை, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

dmk-politicians

By

Published : Sep 17, 2019, 1:57 PM IST

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில், நேற்று நாகையிலுள்ள அவுரி திடலில் நடைபெற்றது. திருமருகள் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன்,

"திமுகவில் திறமையானவர்கள் யாருமில்லை, தற்போது முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் அனைவரும் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான். திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நடத்துவதற்காக தற்போது ஹிந்தி மொழியை கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு போதும், யாராலும் இந்தியைத் திணிக்க முடியாது, தமிழர்களின் விருப்பமின்றி ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை பெற்ற மாநிலம் தமிழ்நாடு" என்றார்.

திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேலும் பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை ஸ்டாலின் சொல்லி வருவதாகவும், ஸ்டாலினின் தந்தை கருணாநிதியும் வெளிநாடு சென்றார், அவரும் எடப்பாடியை போன்று கோட், சூட் அணிந்து கண்ணாடி அணிந்து கொண்டு தான் சென்றார் என்பதை மறந்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details