மயிலாடுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி(தனி), பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த 3 தொகுதிகளையும் திமுக அதன் கூட்டணி கட்சி கைப்பற்றியது. பூம்புகாரில் திமுகவின் நிவேதா முருகன், சீர்காழி தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மயிலாடுதுறையில் திமுக, கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் வெற்றிக் கொண்டாட்டம்! - DMK MLAs pay homage to Anna statue
மயிலாடுதுறை: மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் திமுக, கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர். அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தங்களின் வெற்றியைக் கொண்டாடினர்.
DMK Celebration
வெற்றி பெற்ற மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களும் மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு பணிகளுக்கு மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்!