புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் கடும் கனமழை பெய்துவந்தது. இதனையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளில் பல வீடுகளில் மழைநீர் புகுந்தது.
இந்நிலையில் இன்று (டிச. 06) நாகைக்கு வருகைபுரிந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த வயல்வெளிகளைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு திமுக சார்பில் போர்வை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.