நாகப்பட்டினம் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகை அவுரி திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”அதிமுகவில் தொண்டனும் பொறுப்பிற்கு வரலாம். ஆனால், திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பின்னர் அவரின் மகன் என தமிழகத்தை குடும்பமே ஆள நினைக்கும் கட்சி. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக.
அனைத்து ஏழை மக்களுக்கும் அரசாங்கமே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். மீனவர்கள் கடனுதவி பெற கூட்டுறவு தனி வங்கி அமைக்கப்படும். அக்கரைபேட்டை மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும். திருமருகல் தனி தாலுக்காவாக மாற்றப்படும். காயிதே மில்லத் பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இந்தியாவிலேயே சாதி, மத மோதல்கள் இல்லா அமைதியான மாநிலம் தமிழகம் தான்” என்றார்.