தமிழ்நாட்டில் சாலையோரங்களில் முறையான அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சி ஆணையர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தின்உதவியோடுமயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொடிக்கம்பங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இடித்து அகற்றப்பட்டன.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம்! - திமுக வாக்குவாதம்
நாகப்பட்டினம்: அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம் செய்ததால் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சின்னக்கடை வீதி பகுதியில் அமைந்துள்ள திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த திமுக நகர செயலாளர் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் மயிலாடுதுறை அதிமுக நகர துணை செயலாளர் நாஞ்சில் கார்த்தியும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து வெளியேறுமாறு அவர்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் வெளியேற மறுத்து சாலை மறியலில் ஈடுபடப்போவதாகக் கூறி மீண்டும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கொடிக்கம்பங்களை இடிக்கும் பணியை தற்காலிகமாக அதிகாரிகள் நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.