மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று (ஏப்.6) கீழநாஞ்சில் நாடு பகுதி அன்பகம் மனநல காப்பகத்தில் இருந்து திமுக கட்சியினர் வாக்குக்காக மாற்றுத்திறனாளிகளை, ஆசாத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 190ஆவது வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தபோது பாமகவினர் தடுத்தனர்.
இதனால் இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. பூத் ஏஜண்டுகளிடம் வழங்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் மாற்றுத்திறனாளிகளின் பெயர்கள் இல்லாததால் அவர்கள் வாக்களிப்பதற்கு பாமக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக - பாமக இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபடும் காவல்துறை இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல்துறையினர், இரண்டு தரப்பினரிடையே மோதல் வராமல் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணையில் புதிதாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டோர் பட்டியலில் எழுபதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வாக்குகள் பாதுகாவலர் ஞானபிரகாசம் என்று குறிப்பிடப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திருக்கும் பட்டியலில் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது.
உடனடியாக காவல் துறை, கட்சியினர் யாரும் வாக்காளர்களை அழைத்து வரக்கூடாது என்று கூறி அவர்களை வாக்களிக்க அனுமதித்து.பின் காவல் துறையினர் கூட்டத்தினரை கலைந்து போகச்செய்தனர்.
இதையும் படிங்க:காங். மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர் வாக்குப்பதிவு