நாகையில் கீழ்வேளூரில் திராவிடர் கழகத்தின் சார்பாக மணியம்மையார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியில், தப்பாட்டம் இசைத்தவாறு, பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்க கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து மூட நம்பிக்கைக்கு எதிராக திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெண்கள் வெறும் கையில் தீச்சட்டியை ஏந்தியவாறும், இரண்டு ஆண்கள் முதுகில் அழகு குத்தியபடி காரை இழுத்து வந்தும், கடவுள் மறுப்பு கோஷங்களை எழுப்பினர்.
நாகையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பரப்புரை அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் கடைத்தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறந்த சமூக சேவை செய்துவரும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100 பெண் போராளிகளுக்கு மணியம்மையார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க :'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'