தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நேற்று (அக். 24) கொண்டாடப்பட்ட நிலையில், 12 மணி நேரம் வித்தியாசம் உள்ள அமெரிக்காவில் இன்று (அக். 25) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
காலையில் வீடுகளில் பூஜை செய்து தீபாவளி படையலிடும் இந்தியர்கள் மாலை வேளையில் அங்கு உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஒரே இடத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
டெலவேர் மாகாணத்தில் உள்ள மகாலட்சுமி ஆலயத்தில் அங்குள்ள இந்தியர்கள் கூட்டமாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் அருகே உள்ள மைதானத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.