நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் வேலு. இவருக்கும் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன் நிர்மலா வேலுவை விட்டு பிரிந்துச் சென்றார்.
இதையடுத்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சமி என்பவரை வேலு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், வேலுவை 4 ஆண்டுகளாக விழுந்தமாவடி மீனவ கிராம பஞ்சாயத்தார், தொழில் செய்ய விடாமல் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் வேலுவின் வீட்டுக்கு வந்த நிர்மலா, விஜயலட்சமியை விரட்டுவதற்கு முயற்சிப்பதாகவும், வேலுவிடம் கிராம பஞ்சாயத்தார் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த வேலு, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.