தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பெண்கள் ஆண்டிற்கு ஒருமுறை உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்" - மார்பக புற்றுநோய்

மயிலாடுதுறை: பெண்கள் ஆண்டிற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா தெரிவித்துள்ளார்.

Breast cancer
Breast cancer

By

Published : Oct 22, 2020, 6:23 AM IST

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அவர் பேசுகையில், "இந்தியாவில் மார்பக புற்றுநோயால் அதிக அளவிலான பெண்கள் பாதிப்படைகின்றனர். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான், ஆரம்பநிலையில் மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவரும். குறைந்த செலவிலேயே குணப்படுத்திவிட முடியும். பெண்கள் அலட்சியமாக இருந்து நோய் முற்றிய பின்பு பல லட்சம் செலவு செய்வதோடு அவதிப்படுவதை தவிர்க்கலாம்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் அச்சமின்றி சிகிச்சை பெற்று புற்றுநோய் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாமல் முன்னெச்சரிக்கையாக தடுத்து கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தேசிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் கடிதம் நியாயமற்றது!

ABOUT THE AUTHOR

...view details