தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க ஆர்ப்பாட்டம்! - nagapattinam district pencener protest

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க ஆர்ப்பாட்டம்!

By

Published : Aug 22, 2019, 4:51 PM IST

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், சமூக நல அமைப்பினர், அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க ஆர்ப்பாட்டம்!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் ராமானுஜம், ’அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியன்றே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் தொடரும். இதைத் தொடர்ந்து 27ஆம் தேதியன்றும் பாத யாத்திரையாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல இருக்கிறோம்’ என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details