நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காட்டில், உள்ள தனியார் பள்ளியில், மாவட்ட கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் கழகம் சார்பில், மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கின.
இதில் 14 வயதிற்கு உட்பட்டவர்கள், 17 வயதிற்கு உட்பட்டவர்கள் என்ற இரண்டு பிரிவுகளில், மாணவர், மாணவிகளுக்கான போட்டிகள் தனித்தனியே நடைபெற்றன.
முதல் நாளான இன்று மாவட்டம் முழுவதும் இருந்து ஆடவர் போட்டியில் 7 அணிகளும், மகளிர் போட்டியில் 5 அணிகளும் பங்கேற்று விளையாடின. 8 ஓவர்கள் கொண்ட போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன.
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி! மாணவ, மாணவிகள் பங்கேற்ப்பு; முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள், ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளன. போட்டியை ஏராளமான மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.