நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக ஐந்து அடுக்கு மாடிக்கட்டடம் ஒதுக்கப்பட்டு, இரண்டு வென்டிலேட்டர் மற்றும் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனை கரோனா வார்டில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.! - மருத்துவமனையில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
நாகை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டு பகுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.
இங்கு 14 மருத்துவர்கள், 28 செவிலியர், 5 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் முறையாக மேற்கொண்டு வருவது குறித்தும், வார்டில் உள்ள படுக்கை அறைகள், வென்டிலேட்டர் வசதி உள்ளிட்டவை குறித்தும் அவர் கேட்டறிந்தார். ஆய்வின்போது சுகாதாரத் துறை மாவட்ட இணை இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
TAGGED:
corona virus special ward