கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணையிலிருந்து அதிக அளவிலான தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வதனால் அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வெண்ணாறு, காவேரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை -ஆட்சியர் - nagapattinam
நாகை: கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களை பொது கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் தங்க வைப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. துணை ஆட்சியர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கரையோர பகுதிகளில் தொடர் கண்காணிப்பு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் ஆற்றுப் பகுதிகளில் நின்றவாறு செல்ஃபி எடுக்கக் கூடாது, மீன் பிடித்தல், குளிக்க செல்லக்கூடாது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை தடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.