மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 26ஆவது மடாதிபதி, குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள், நேற்று உடல் நலக்குறைவால் முக்தியடைந்தார். அவரது திருமேனி, பக்தர்கள் அஞ்சலிக்காக தருமபுரம் ஆதீன வளாகத்தில் வைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், செங்கோல் ஆதீனம், புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், பள்ளி, கல்லூரி மாணவர் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமயில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிந்துள்ளனர். இன்று மாலை ஐந்து மணியளவில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தருமபுரம் ஆதீனம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் அதற்காக மேலகுருமூர்த்தம் என்ற பகுதியில் இறுதிப் பணிகள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. இளைய ஆதீனமாக உள்ள ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்தர் சுவாமிகள் வரும் 13ஆம் தேதியன்று 27ஆவது மடாதிபதியாக பரிவட்டம் ஏற்கவுள்ளார்.
இதையும் படிங்க: மறைந்த தருமபுரம் ஆதீன மடாதிபதியின் உடலுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அஞ்சலி