தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்! - Mayiladuthurai Election Officer

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள ஸ்டாங்ரூம், வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவின்நாயர், மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் இன்று (ஏப். 1) ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

By

Published : Apr 1, 2021, 10:54 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்திற்குள்பட்ட மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளான மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகள் வாக்குப்பதிவு முடிந்தவுடன், இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான ஸ்டாங்ரூம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணிகள், வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு அறையின் பாதுகாப்புகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவின்நாயர், மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவின்நாயர் கூறுகையில், 'அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மை, இங்க் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் தயார் நிலையில் உள்ளன.

இரண்டு கட்டப் பயிற்சி

இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரண்டு கட்டப் பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. ஏப்.5ஆம் தேதி அவர்கள் பணியாற்றும் இடத்திற்கான ஆணைகள் வழங்கப்படும். தேர்தல் நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் செய்யப்பட்டு வருகிறது.

55 வாக்குச்சாடிகள் பதற்றமானவை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 55 வாக்குச்சாடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு'

ABOUT THE AUTHOR

...view details