தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைக்குள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் விநியோகம்- அமைச்சர் ஓ.எஸ். மணியன் - ரேசன் பொருட்கள் விநியோகம்

நாகை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்றைக்குள் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

Distribution of ration products to everyone today  said Minister OS Maniyan
Distribution of ration products to everyone today said Minister OS Maniyan

By

Published : Apr 7, 2020, 1:46 PM IST

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை ந்குறித்து நாகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்,.மணியன் கலந்துகொண்டார்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”டெல்லி சென்று திரும்பிய 32 நபர்களில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் இதுவரை மூன்றாயிரத்து 380 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகள் தற்போது சீல் வைக்கப்பட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் ரேசன் பொருட்கள் விநியோகம்- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சரக்கு லாரி மற்றும் உணவு பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலாளர்களை பணிக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் அரசின் நிவாரண பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்றைக்குள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க:ஏப்ரல் மாதம் இறுதி வரை நிவாரணம் - அமைச்சர் காமராஜ்!

ABOUT THE AUTHOR

...view details