மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளராக கோமல் அன்பரசன் போட்டியிடுகிறார். மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக, தான்பெற்று தந்ததாக தேர்தல் பரப்புரையில் அவர் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், "அனைத்து தரப்பு மக்களும் போராடி பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தை தான் பெற்று தந்தது போல் கூறும் அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசனை தகுதி நீக்கம் செய்து, மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆ. ராசா பரப்புரைக்கு தடை கோரி புகார் மனு