தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, வடகிழக்குப் பருவமழையால் பெரும்பாதிப்புக்கு நாகை மாவட்டம் உள்ளாகும். இதனைக் கருத்தில்கொண்டு மாவட்டத்தில் பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக மாவட்ட காவல் துறையினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 50 பேருக்கு நேற்று (செப்.21) முதல் தொடர்ந்து 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக சென்னையில் உள்ள அதிவிரைவுப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தலைமையில் பயிற்சி பெற்ற 2 காவலர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.