தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கேற்றிய தருமபுரம் ஆதீனம் - பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கேற்றிய தருமபுரம் ஆதீனம்

நாகை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் 1008 தீபங்கள் ஏற்றப்பட்டன. சிவலிங்கம், ஓம் என்ற வடிவங்களில் ஏராளமான பொதுமக்கள் தீபங்களை ஏற்றினர்.

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கேற்றிய தருமபுரம் ஆதீனம்
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கேற்றிய தருமபுரம் ஆதீனம்

By

Published : Apr 6, 2020, 11:10 AM IST

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பொதுமக்கள் இந்தியாவின் ஒற்றுமையை பிரகடனப்படுத்தும் வகையில் கரோனா எனும் அரக்கனை விரட்டுவதற்காக இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் ஏற்றினர்.

வீதிகளில் விளக்குகள் ஏற்றியும் மாடியில் நின்று டார்ச் லைட் ஒளிரவிட்டும் கரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோல் மயிலாடுதுறை அடுத்த தருமபுர ஆதீன மடத்தில் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மடத்தின் நுழைவாயில் தொடங்கி, கோபுர மாடங்கள் வரையில், 1008 விளக்குகள் ஏற்றப்பட்டன.

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கேற்றிய தருமபுரம் ஆதீனம்
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கேற்றிய தருமபுரம் ஆதீனம்

ஓம், சிவலிங்க வடிவங்களில் பிரம்மாண்டமான முறையில் தீபங்கள் ஏற்றப்பட்டன. முன்னதாக ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details