மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சைவத்தையும் தமிழையும் பரப்பும் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது. இவ்வாதீனத்தால் 1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரே அமைந்துள்ளது.
தமிழ் கல்லூரியாக தொடங்கப்பட்டு 1988ஆம் ஆண்டு கலைக்கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. இக்கல்லூரியின் 75ம் ஆண்டு பவள விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. பவள விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 3,000 பேர் அமரும் வகையில் 80அடி அகலமும் 220அடி நீளமும் கொண்ட பிரமாண்ட கலையரங்கம் கட்டப்பட்டு கலையரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 24) திறந்து வைக்கிறார்.
மேலும் தருமையாதீன வானொளி, தொலைக்காட்சி ஒளி ஓலி பதிவகத்தை திறந்து வைத்தும் பவள விழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். முதலமைச்சர் வருகை தர உள்ளதால் விழா ஏற்பாடுகள் தருமபுர ஆதீனகர்த்தர் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
Sengol: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல்.. வரலாறும், சர்ச்சையும்!
முதல்வர் வருகையால் கல்லூரி வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கல்லூரி மற்றும் புதிய கலையரங்கம் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தோரணவாயில் முகப்பு, வாழை மரங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. முதல்வர் வருகையை ஒட்டி 3 எஸ்பிக்கள், 6 ஏடிஎஸ்பிக்கள், 9 டிஎஸ்பிக்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் முன்னேற்பாடு பணிகள் குறித்து தருமபுர ஆதீன கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு ஆதீனகர்த்தரிடம் அருளாசி பெற்றார். இதில் திமுக ஒன்றியசெயலாளர் மூவலூர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆதீனங்களின் ஆசியும், அரசியலும் தமிழ்நாட்டில் ஒன்றும் புதிதல்ல. சைவ மத குருமார்களான ஆதினங்களும், வைணவ மத குருமார்களான ஜீயர்களும் அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் சமீபத்திய நிகழ்வு நடைபெற்றது.
இதையும் படிங்க:உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது யார்? டைபிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதல்!