தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானத்தின் குருபூஜையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்! - gurupooja

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானத்தின் முதலாமாண்டு குருபூஜை விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்றார்.

dharumai-adhinam-guru-poojai-minister-participate
dharumai-adhinam-guru-poojai-minister-participate

By

Published : Nov 23, 2020, 7:34 AM IST

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கடந்த ஆண்டு முக்தி அடைந்தார். ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அவரது முதலாமாண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் ஆனந்தபரவசர் பூங்காவில் நடைபெற்ற விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் எழுந்தருளி 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் குருமூர்த்தத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினார்.

இந்த விழாவில், 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் நினைவு மலரை 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலர் லலிதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதில் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், பாரதி, பாஜக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ஏமாற்றத்தில் முடிந்ததா அமித் ஷாவின் சென்னை பயணம்?

ABOUT THE AUTHOR

...view details