மயிலாடுதுறை பெரியார் மருத்துவமனையில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ’’தற்போது இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே, இன்றைய தினம் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் நான் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன்.
தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்திற்கு கரோனா தடுப்பூசி - mayiladudurai
மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்
மேலும், தருமபுரம் ஆதீனத்தில் உள்ள கட்டளைத் தம்பிரான்கள், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம். அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
இதையும் படிங்க: செய்முறைத் தேர்வு முடிந்ததும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை