தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய அவசர ஊர்தி சேவையை தொடங்கிவைத்த தருமபுரம் ஆதீனம் - புதிய இலவச ஆம்புலன்ஸ் சேவை

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் வசிக்கும் மக்களின் வசதிக்காக புதிய அவசர ஊர்தி சேவையை தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்.

Ambulance
Ambulance

By

Published : Aug 23, 2021, 6:17 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் இயங்கிவரும் 108 அவசர ஊர்தி சுற்றுவட்டார பகுதியில் ஏற்படும் அவசர தேவைக்கு சென்றுவிடுவதால் இப்பேரூராட்சியில் ஏற்படும் அவசர தேவைக்கு வாகனம் தாமதமாக கிடைக்கும் சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து பேரூராட்சி சார்பாக தனி அவசர ஊர்தி ஏற்பாடு செய்ய முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்று இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் மற்றும், மேலையூர் சீனிவாசா பள்ளி 1986ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் இணைந்து புதிய அவசர ஊர்தியை பொதுமக்களின் தேவைக்காக வாங்கி கொடுத்தனர்.

இதனை மக்கள் பன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவசர ஊர்தி சேவையை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

பேரூராட்சி மக்களின் தேவைக்காக சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்த முன்னாள் செயல் அலுவலரின் முயற்சி ஒரே மாதத்தில் செயல்பாட்டிற்கு வந்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுபோல், தொழில் அதிபர்கள், வசதி வாய்ப்புகள் பெற்றவர்கள் தங்களது சொந்த ஊருக்கான தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details