மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் எழுந்தருளியுள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர், அபயாம்பிகை சமேத தர்மபுரீஸ்வரர் சுவாமி கோயில் முழுவதும் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று (அக். 29) நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி 27ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.
காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி 9 மணிக்கு பூர்ணாஹூதியாகி கடகம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து, தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் காலை 9.30 மணிக்கு ஞானபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு தர்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.