நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 26ஆவது மடாதிபதி, குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள், உடல் நலக்குறைவால் முக்தியடைந்தார். அவரது திருமேனி, பக்தர்கள் அஞ்சலிக்காக தருமபுரம் ஆதீன வளாகத்தில் வைக்கப்பட்டது.
தருமபுரம் ஆதீன மடாதிபதியின் திருமேனி நல்லடக்கம் - தருமபுரம் ஆதீன மடாதிபதி
நாகை: தருமபுரம் ஆதீன மடாதிபதியின் திருமேனி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனைடுத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், செங்கோல் ஆதீனம், புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அவரது திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் பல்லக்கில் வைத்து நான்கு வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. பின் ஆதீனத்தில் உள்ள ஆதின குருமூர்த்த நந்தவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மதுரை, திருப்பனந்தாள், ரத்தினகிரி, வேளாக்குறிச்சி, செங்கோல், திருவாவடுதுறை, குன்றக்குடி ஆகிய ஆதீனங்களின் மடாதிபதிகள், கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், கௌமார மடம், வீரசைவ மடம், மயிலம், பொம்மபுரம், மடாதிபதிகள் கோவை காமாட்சிபுரி ஆதீன மடாதிபதி, நீதிபதிகள் இந்து அறநிலைய ஆட்சித் துறை அலுவலர்கள் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.