தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவணி மூலப் பெருவிழா: பலதுறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு விருதுகள் - Nagapattinam District News

நாகை: தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற ஆவணி மூலப் பெருவிழாவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்தவர்களுக்கு ஆதீனகர்த்தர் தங்கப்பதக்கம் விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.

Adhinam
Adhinam

By

Published : Aug 29, 2020, 9:06 AM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலப் பெருவிழா நேற்று (ஆக.28) கொண்டாடப்பட்டது. விழாவில், பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த அறிஞர் பெருமக்களுக்கு தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் விருதுகளை வழங்கினார்.

ஆதீன தொடக்கப்பள்ளிச் செயலர் கும்பகோணம் சௌந்தரராஜனுக்கு 'கல்விக் காவலர்’, சீர்காழி ராமதாஸிற்கு 'ஆன்மிகப் பதிப்புச் செம்மல்', ஊடகவியலாளர் கோமல் அன்பரசனுக்கு 'ஊடகவியல் செல்வர்' ஆகியப் பட்டங்களை வழங்கி, அனைவருக்கும் இண்டை மாலை, தங்கப்பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கி அருளாசி நல்கினார்.

மேலும் விழாவில், திருப்பனந்தாள் காசிமடத்து 21ஆவது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details