மயிலாடுதுறை: கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியை தருமபுர மடாதிபதி திறந்து வைத்தார்.
கரோனா சிகிச்சை பெறுவதற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 780 படுக்கை வசதிகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 70 படுக்கை வசதிகள் உள்ளன. தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆதீனம் சம்மதம் தெரிவித்திருந்தார்.
அதன்படி கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் இன்று (மே.16) தொடங்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து, பார்வையிட்ட தருமை ஆதின 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அந்த சிகிச்சை மையத்தை மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் ஒப்படைத்தார்.