தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுர ஆதீன மடாலயத்தில் புத்தாண்டு பூஜை...

நாகப்பட்டினம்: புத்தாண்டை முன்னிட்டு தருமபுர ஆதீன மடாலயத்தில் அமைந்துள்ள வனதுர்க்கை ஆலயத்தில் 108 குதிரைகள், 108 பசுக்கள் மற்றும் காளை மற்றும் பைரவருக்கு பூஜை நடைபெற்றது.

By

Published : Jan 1, 2021, 2:43 PM IST

தருமபுர ஆதீனம்
dharmapura adheenam

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன மடாலயம் அமைந்துள்ளது. இங்கு உள்ள சிங்கார தோட்டத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இன்று(ஜன1) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், 108 பசுக்கள், 18 காளை மாடுகள், 108 குதிரைகள், 18 பைரவர்கள் ஆகியவற்றிற்கு அஸ்வ பூஜை, கோபூஜை, ரிஷப பூஜை, வடுகபூஜை ஆகியவை நடைபெற்றது.

தருமபுர ஆதீன மடாலயத்தில் புத்தாண்டு பூஜை

முன்னதாக வன துர்க்கை அம்மனுக்கு 108 லிட்டர் பால், 108 லிட்டர் பன்னீர் மற்றும் 27 வகையான திரவியங்கள் கொண்டு மகாபிஷேகம் நடைபெற்றது. தருமபுர ஆதீன 27-ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: 2 ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details