தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்கடையூர் கோயிலில் பக்தர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு வழிபாடு - மயிலாடுதுறை கோவில் செய்திகள்

உலகப்புகழ் பெற்ற திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து வழிபாடு செய்தனர்.

திருக்கடையூர் கோவிலில் பக்தர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு வழிபாடு
திருக்கடையூர் கோவிலில் பக்தர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு வழிபாடு

By

Published : Jan 1, 2023, 8:56 PM IST

திருக்கடையூர் கோயிலில் பக்தர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி, எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்டப் பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60, 70, 80, மற்றும் 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். வருடம் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஒரே தலமாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோயிலுக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில், அவருக்கு பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரு மகாசன்னிதானம் கள்ள விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தியை வழிபட்டு விட்டு, தொடர்ந்து அபிராமி அம்மன் சந்நிதியில் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

புத்தாண்டையொட்டி உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்தும் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாட்டம்; புதுக்கோட்டையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ABOUT THE AUTHOR

...view details