தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உத்திராபதியார் கோவிலில் பிள்ளை வரம் வேண்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நாகை: நல்லூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோவிலில் நடைபெற்ற பிள்ளை கனியமுது வழங்கும் விழாவில் குழந்தையில்லா பெண்கள் கலந்துகொண்டனர்.

temple

By

Published : May 5, 2019, 6:18 AM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திராபதியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் சிவபெருமானுக்கு அமுது படையலும், உத்திராபதியாருக்கு பிள்ளை கனியமுது படையல் விழாவும் நடைபெறும்.

குழந்தை இல்லா பெண்கள் குழந்தை வரம் வேண்டி இங்கு வழங்கப்படும் பிள்ளை கனியமுதை பெற்று உண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இதேபோன்று வேண்டுதல் நிறைவேறி குழந்தை பேறு பெற்றவர்கள் அடுத்த ஆண்டு பிள்ளை வடிவிலான கனியமுது செய்து நேர்த்திகடன் செலுத்துவது வழக்கமாகும்.

இந்தாண்டு நடைபெற்ற விழாவில் குழந்தை வடிவிலான கனியமுது ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு உத்திராபதியாருக்கு படையலிடப்பட்டது. பின்னர் அமுது படையலுடன் சேர்த்து இந்த பிள்ளை கனியமுதை குழந்தையில்லா பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு பக்தியுடன் பிள்ளை கனியமுது பெற்று கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details