நாகப்பட்டினம் மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் ஆலயத்திற்கு உடல் முழுவதும் விபூதி பூசிய வண்ணம் தாமோதர் சாது வந்தார். நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காசியிலும், தற்போது நேபாளித்திலும் இருந்ததாகவும் அங்கிருந்து கிளம்பி வழிநெடுகிலும் சிவன் கோயில்களில் தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
நேபாளத்திலிருந்து வந்த சாது: ஆசி பெற்ற பக்தர்கள்! - Mayiladuthurai district news
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோயிலுக்கு நேபாளத்திலிருந்து வந்த சாதுவிடம் ஏராளமான பக்தர்கள் வணங்கி ஆசி பெற்றனர்.
நேபாளத்திலிருந்து வந்த சாது
இந்நிலையில், உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டு மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் ஆலயத்திற்கு வந்த சாதுவை பாஜகவினர் வரவேற்றனர். ஆலயத்தில் சிவனை வணங்கி பிரகாரத்தை சுற்றிவந்த சாமியாரிடம் பாஜகவினர் ஆசிபெற்றனர். கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் கோவணத்துடன் வந்த விபூதி சாமியாரை ஆச்சரியத்துடன் கண்டு விபூதி சாமியார் என்று அழைத்து அவரிடம் ஆர்வமுடன் ஆசி பெற்றனர்.
இதையும் படிங்க: ஜீவசமாதி அடைய முயன்றாரா அகோரி? ஆண்டிபட்டியில் பரபரப்பு!