தமிழ்நாடு

tamil nadu

வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்களால் கரோனா பரவும் அபாயம்?

By

Published : Oct 18, 2020, 1:21 PM IST

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கரோனா விதிகளை முறையாகப் பின்பற்றாததால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

devotees
பக்தர்

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு தளர்த்தியதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் திரள்கின்றனர்.

கடந்த மாதம் நடைபெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அப்போது, தங்கள் நேர்ச்சைகளை (வேண்டுதல்) நிறைவேற்ற முடியாதவர்கள் தற்போது அதனை நிறைவேற்ற வேளாங்கண்ணிக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று (அக்.,18) சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கார், பேருந்து மூலம் வேளாங்கண்ணிக்கு வருகை புரிந்துள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தர்கள்

விடுதிகள் அனைத்தும் திறக்கப்பட்டிருப்பதால் வேளாங்கண்ணி கடைத் தெரு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் பக்தர்களின் கூட்டத்தினால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் பெருமளவில் முகக் கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளனர்.

வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்களால் கரோனா பரவும் அபாயம்?

கடற்கரையில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தும் பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி கடலில் நீராடி வருகின்றனர். இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வேளாங்கண்ணியில் குவிந்த வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் : கடற்கரையில் குளிக்க அனுமதி மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details