தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரு பகவான் ஆலயத்தில் பக்தர்கள் குருப்பெயர்ச்சி தரிசனம்: குரு பார்க்க கோடி நன்மை! - குரு பகவான், குருப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி பலன்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் குரு பகவானை தரிசனம்செய்தனர்.

குரு பகவான், குருப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி பலன்
குரு பகவான், குருப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி பலன்

By

Published : Nov 14, 2021, 8:47 AM IST

நவகிரகங்களில் தேவகுருவான குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசம் செய்கின்றார். குரு இருக்கும் இடத்தைவிட, பார்க்கும் இடங்கள் புண்ணியம் அடைவதாக ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் நேற்று (நவ. 13) மாலை குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குச் சரியாக 6.21-க்கு இடம்பெயர்ந்தார். தனக்காரகன், புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானைச் சிவாலயங்களில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சன்னிதியில் வழிபாடு நடத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை அடைய முடியும் என்பது நம்பிக்கை.

குருப்பெயர்ச்சி தரிசனம்

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மேதா தட்சிணாமூர்த்திக்குச் சிறப்புத் திருமுழுக்குச் சடங்கு நடைபெற்றது.

குருப்பெயர்ச்சி தரிசனம்

உலக நன்மை, கரோனா தொற்று நோய் நீங்க, இயற்கைச் சீற்றம் வராமல் இருக்க வேண்டி பஞ்சமுக அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து குரு பகவானுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது.

இதில் தருமபுர ஆதின கட்டளை விசாரணை சிவகுருநாதன், சட்டநாதன் தம்பிரான்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் காத்திருந்து குரு பகவானை தரிசனம்செய்தனர்.

இதையும் படிங்க: உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி

ABOUT THE AUTHOR

...view details