தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குத்தாலத்தில் போதைப் பொருள்கள் அழிப்பு - nagai latest news

நாகை: நீதிமன்றம் உத்தரவின்படி குத்தாலத்தில் ஒரு கோடிரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டது.

போதைப் பொருள்கள் அழிப்பு
போதைப் பொருள்கள் அழிப்பு

By

Published : Oct 1, 2020, 10:40 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவலங்காடு சோதனைச் சாவடியில் கடந்த மே மாதம் 17ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு சரக்கு லாரியில் 60 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஹான்ஸ் பாக்கெட்டுகளை குத்தாலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் வாகன ஓட்டுநர் மதுரை ஒத்தக்கடை மேலையூர் மெயின் ரோட்டை சேர்ந்த பூரண ஜோதி(32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருள்கள் அழிப்பு

இந்நிலையில் குத்தாலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் புகையிலை நாற்றம் வந்ததையடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஹான்ஸ் புகையிலையை அரசு அலுவலர்கள் முன்னிலையில் அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து குத்தாலம் பேரூராட்சியில் உணவுத் துறை ஆய்வாளர் ரெங்கசாமி, சுகாதார ஆய்வாளர் மோகன் தாஸ், குத்தாலம் காவல் ஆய்வாளர் முருகேசன் முன்னிலையில் துப்புரவு பணியாளர் ஊழியர்களைக் கொண்டு குத்தாலம் பேரூராட்சி கம்போஸ்ட் குப்பை கிடங்கில் குழித்தோண்டி கொட்டி ஹான்ஸ் பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டது.

இதையும் படிங்க:

செக் மோசடியில் ஈடுபட்ட நபருக்கு மூன்று மாதங்கள் சிறை - மாஜிஸ்திரேட் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details