நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே உள்ள மேமாத்தூர் கிராமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கெயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய குழாய்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்கள் வழியாக பதித்து வருகிறது.
தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று(ஜூலை 22) மேமாத்தூரில் அதன் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது சுமார் 15 அடி உயரத்திற்கு மேல் திடீரென வாயு வெளியேறியதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும்போது வாயு வெளியேற்றம் இதற்கு கெயில் நிறுவனத்தினர் குழாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றபோது காற்று அழுத்தத்தின் காரணமாக புழுதியுடன் வாயு வெளியேறியதாக தெரிவித்தனர். ஆனால் வாயு வெளியேறியதை அந்நிறுவனத்தினர் மூடி மறைப்பதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள நிலையில் மேமாத்தூரிதல் கெயில் நிறுவனம் 20 அடி அழத்திற்கு பைப்புகளை பதித்து தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதனை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாங்கூர் பகுதியில் கெயில் நிறுவன வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு !