தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதைத் தடுக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேரிடர் பாதுகாப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் பேரிடர் பாதுகாப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கி நாகூர் வரை நடைபெற்றது. இப்பேரணியை முதன்மை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணியில், டெங்கு விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, செவிலியர், பயிற்சி பள்ளி மாணவிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி பலி