பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்: காணொலி அழைப்பில் பார்வையிட்ட திருமாவளவன்! - தொல் திருமாவளவன்
நாகப்பட்டினம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தை திருமாவளவன் காணொலி அழைப்பின் மூலம் பார்வையிட்டார்.
கரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இதனையடுத்து புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும்; அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முகக் கவசங்கள் அணிந்தும், தகுந்த இடைவெளியையும் பின்பற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் காணொலி அழைப்பின் மூலம் பார்வையிட்டார்.