மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் எல்.ஐ.சி முகவர்கள் 20க்கும் மேற்பட்டோர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எல்.ஐ.சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி எல்.ஐ.சி முகவர்கள் ஆர்ப்பாட்டம் - Demonstration by LIC agents
மயிலாடுதுறை: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி எல்.ஐ.சி முகவர்கள் சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
demonstration-by-lic-agents
அப்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், போராட்டம் நடத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் தொடுப்பதை நிறுத்த வேண்டும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.