தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினம்: பல்வேறு கேரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Feb 3, 2021, 3:21 PM IST

ஜனவரி மாதம் பெய்த கனமழையால் கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கனக்கான ஏக்கர் விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கின.

இந்நிலையில் நாகப்பட்டினம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அதன் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை முழுவதையும் தாமதமின்றி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: பருத்தி விவசாயிகள் அலைக்கழிப்பு!

ABOUT THE AUTHOR

...view details