நாகை மாவட்டம் பூம்புகார் அருகே தருமகுளம் காவிரி ஆற்றின் கடைமடை பகுதியில் கடல்நீர் உட்புகாமலும், காவிரி நீர் கடலில் கலக்காமலும் தடுக்க ரூ. 786.57 லட்சம் மதிப்பில் கதவணை கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு அப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை சிறப்பு அலுவலர் லலிதா ஐ.ஏ.எஸ், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், "விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கதவணை கட்ட அனுமதித்துள்ளார். விவசாயிகளின் தலைமுறை தலைமுறையான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.