மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற இரட்டை கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் பைசல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் சிம்னி விளக்கு ஏந்தி மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.