கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகையில் உள்ள நல்லியான்தோட்டம், வெளிப்பாளையம், காடம்பாடி பகுதியைச் சேர்ந்த 60 குடும்பத்தினர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர். இவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் முகாம் பின்புறமுள்ள சூர்யா நகரில் சுனாமி தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்நிலையில் 13 ஆண்டுகளாக குடியிருக்கும் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு இதுவரை அரசு பட்டா வழங்கவில்லை.
கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுவதால், அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த வீடுகளை புனரமைப்பு செய்து குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சூர்யாநகர் பகுதி மக்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.