தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீது அவதூறு: அமமுக நிர்வாகி கைது - அமைச்சர் ஓ எஸ் மணியன்

நாகப்பட்டினம்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் குறித்து ஃபேஸ்புக்கில் தவறாக விமர்சனம் செய்த அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யபட்ட ராஜா
கைது செய்யபட்ட ராஜா

By

Published : Jul 29, 2020, 11:03 PM IST

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் தலைமை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக மீண்டும் அமைச்சர் ஓஎஸ்.மணியன் நியமிக்கபட்டுள்ளார்.

இந்த நிலையில் மாவட்ட செயலாளராக அறிவிக்கபட்ட அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு ஃபேஸ்புக் மூலம், வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த அதிமுக 1 வது வார்டு செயலாளர் விநாயக மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கீழையூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா, ஓ.எஸ்.மணியன் குறித்து அவதூறாக விமர்சனம் செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகி விநாயக மூர்த்தி, கொடுத்த புகாரை தொடர்ந்து வேளாங்கண்ணி காவல்துறையினர் ராஜாவை கைது செய்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details