தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரங்கம்பாடி கடலில் புத்தர் சிலையுடன் மிதந்து வந்த தெப்பம் - Tharangambadi beach area

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் சிதைந்த புத்தர் சிலையுடன் மிதந்து வந்த தெப்பம் குறித்து கடலோர காவல் படையினர் விசாரித்து வருகின்றனர்.

Etv Bharatதரங்கம்பாடி கடலில் மிதந்து வந்த சிதைந்த புத்தர் சிலை - கடலோர காவல் படை விசாரணை
Etv Bharatதரங்கம்பாடி கடலில் மிதந்து வந்த சிதைந்த புத்தர் சிலை - கடலோர காவல் படை விசாரணை

By

Published : Jan 6, 2023, 7:36 AM IST

தரங்கம்பாடி கடலில் மிதந்து வந்த தெப்பம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் நேற்று (ஜன.15) மாலை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தெப்பம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை கண்ட மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது மரத்தினால் செய்யப்பட்ட தெப்பம் சிதைந்த நிலையில் இருந்தது.

அதில் சிறிய புத்தர் சிலை ஒன்றும் இருந்தது. இந்த தெப்பத்தை கையிற்றால் கட்டி கரைக்கு இழுத்து வந்த மீனவர்கள் உப்பனாற்றில் கட்டி வைத்தனர். அதன்பின் கடலோர காவல் படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்த தெப்பத்தை பார்வையிட்டு போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த தெப்பன் இலங்கையில் இருந்து திசை மாறி இப்பகுதிக்கு வந்ததிருக்காலம் என்று தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:கோவை அருகே உயிரிழந்த பெண் யானையின் எலும்பு கூடுகள் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details