தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம்: பரபரப்பை ஏற்படுத்திய தருமை ஆதீனம் முகநூல் பதிவு!

Dharmapuram Adheenam: தருமபுர ஆதீனம் சார்பில் மயிலாடுதுறையில் தொடக்கப்பட்ட சண்முகதேசிகசுவாமிகள் இலவச மருத்துவமனை இடித்தால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம்
இலவச மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 10:30 PM IST

இலவச மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம்

மயிலாடுதுறை:சின்னகடை வீதியில் 1951 ஆம் ஆண்டு ஏழை எளிய மக்கள் மருத்துவச் சிகிச்சை பெறவேண்டும் என்ற நோக்கில் தருமபுரம் ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம், அவரது தாயார் நினைவாக மகப்பேறு மருத்துவமனை அமைக்கத் திட்டமிட்டு அப்போதைய கவர்னரால் பணிகள் தொடங்கப்பட்டது.

25 வது குருமகா சன்னிதானம் காலத்தில், அப்போதைய முதல்வர் குமாரசாமி ராஜாவால், தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக சுவாமிகள் இலவச மருத்துவ நிலையம் என்ற பெயரில், மருத்துவமனை தொடங்கிவைக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கிவந்தது. இந்த இடத்துடன் மருத்துவமனையை நகராட்சி நிர்வாகத்திடம் ஆதீனம் வழங்கியிருந்தது, காலப்போக்கில் கட்டடம் முறையாக பராமரிக்கப்படாததானால், மிகவும் சேதமடைந்தது.

இந்நிலையில், இலவச மருத்துவமனை மூடப்பட்டு, அதற்கு பதிலாக நகர ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாகத் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. அதனையடுத்து தற்போதைய 27-வது குருமகா சன்னிதானம் இலவச மருத்துவமனையை மீண்டும், ஆதீனம் சார்பில் பராமரிப்பு நடத்துவதற்காக அந்த இடத்தை மீண்டும் வழங்குமாறு நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு வந்தனர்.

ஆனால், எந்த பதிலும் இல்லாத நிலையில், 1951-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, தற்போது பூட்டப்பட்டிருக்கும் கட்டடத்தை இடிக்கப்போவதாகச் செய்திகள் வெளிவந்ததை அறிந்த தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தனது முகநூல் பக்கத்தில், "சண்முக தேசிக சுவாமிகளின் இலவச மருத்துவ நிலைய கட்டடத்தை இடிக்க முற்பட்டால், நம்முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம்" என்று பதிவிட்டு பழைய புகைப்படங்கள், கல்வெட்டுக்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சிறையில் உள்ள பெண் சமூக ஆர்வலருக்கு அமைதிக்கான நோபல் பரிசு.. யார் இந்த நர்கீஸ் முகமதி?

ABOUT THE AUTHOR

...view details